சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பு, ஆக்ஷன், டயலாக் டெலிவரி மற்றும் நடனம் ஆகியவற்றுள் தனக்கென்று தனித்துவமான நடிப்பைக் வெளிப்படுத்தி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தன்வசம் வைத்துள்ளார். இவரது படங்கள் வெளியாகும் நாட்களில் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழா போல் அலங்கரித்துக் கொண்டாடுவர்.
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராகத் திகழும் விஜய், தற்போது படத்தின் வசூலிலும் சக்கரவர்த்தியாக திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் தயாரித்துள்ளனர். மாஸ்டர் படத்துக்குப் பின் விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி 2வது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது.
முன்னதாக, விஜயின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பின்னர், லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடலை படக்குழு அன்று மாலை 6.30 மணிக்கு வெளியிட்டது. இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். 2,000 நடனக் கலைஞர்களைக் கொண்டு பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
-
Happy Birthday #AntonyDas 🔥
— Seven Screen Studio (@7screenstudio) July 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you for being a true inspiration on and off the set, @duttsanjay sir 🤍
Presenting you all the #GlimpseOfAntonyDas ▶️ https://t.co/WYkyktDBjG
Wishing you continued success and happiness ✨#HappyBirthdaySanjayDutt sir #Leo#Thalapathy…
">Happy Birthday #AntonyDas 🔥
— Seven Screen Studio (@7screenstudio) July 29, 2023
Thank you for being a true inspiration on and off the set, @duttsanjay sir 🤍
Presenting you all the #GlimpseOfAntonyDas ▶️ https://t.co/WYkyktDBjG
Wishing you continued success and happiness ✨#HappyBirthdaySanjayDutt sir #Leo#Thalapathy…Happy Birthday #AntonyDas 🔥
— Seven Screen Studio (@7screenstudio) July 29, 2023
Thank you for being a true inspiration on and off the set, @duttsanjay sir 🤍
Presenting you all the #GlimpseOfAntonyDas ▶️ https://t.co/WYkyktDBjG
Wishing you continued success and happiness ✨#HappyBirthdaySanjayDutt sir #Leo#Thalapathy…
இந்த நிலையில் சஞ்சய் தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூலை 29) லியோ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ஆண்டனி தாஸ் கிளிம்ப்ஸ் (glimpse) வீடியோவை வெளியிட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:"கோலிவுட் படங்களில் தமிழர்களுக்கு மட்டுமே இடம்?" - பெப்சி விளக்கம் என்ன?