இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி, தற்போது ஏராளமான படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் ஹிட் அடித்த அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடித்து வருகிறார்.
இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், யோகிபாபு, கேஎஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் இன்று(ஏப்.26) பிறந்தநாள் கொண்டாடும் சமுத்திரக்கனிக்காக கேக் வெட்டியப் படக்குழுவினர், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
மேலும், அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதை ஒட்டி ஏராளமான திரைப் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: த க்ரே மேன் தனுஷின் புகைப்படங்கள் வைரல்!