ETV Bharat / state

காற்றழுத்த கருவி உற்பத்தி ஆலை அமைக்கும் சாம்சங் - முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது! - chennai latest news

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்தின் 1588 கோடி ரூபாய் முதலீட்டில் காற்றழுத்த கருவிகள் (Compressor) உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Samsung sets up pneumatic tool manufacturing plant

author img

By

Published : Mar 15, 2022, 3:37 PM IST

சென்னை : கிண்டியில் உள்ள தனியார் உணவகம் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், பன்னாட்டு தொழில் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் 1,588 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய காற்றழுத்த கருவிகள் (Compressor) உற்பத்தித் திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

நடப்பாண்டில் 1800 கோடி ரூபாய்

சாம்சங் நிறுவனம், 450 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினித்திரைகள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் மற்றும் சலவை சாதனங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சிப்காட் நிறுவனத்தின் சிறப்புப்பொருளாதார மண்டலத்திலும், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பூங்காவிலும் (உள்நாட்டு கட்டணப்பகுதி) அமைத்திட மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் 10.11.2006அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஒரே ஆண்டிற்குள் ஆலை கட்டி முடிக்கப்பட்டு 13.11.2007அன்று, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. அந்த முதலீடு நடப்பாண்டில் 1,800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளது என்ன?

சாம்சங் நிறுவனத்தின் புதிய விரிவாக்கத் திட்டத்திற்கான கட்டுமானப்பணிகள் 2022ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் நிறைவுபெறும் எனவும், 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆண்டொன்றிற்கு 80 இலட்சம் அளவிற்கு காற்றழுத்த கருவிகள் உற்பத்தி மேற்கொள்ளவும், 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் 144 இலட்சம் அளவிற்கு அதன் உற்பத்தியைப் பெருக்கிட திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திருமதி பூஜா குல்கர்னி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (SIPCOT) மேலாண்மை இயக்குநர் த. ஆனந்த்., சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசிய தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கென் காங் (Ken Kang), உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களுடன் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : 'புத்தகப் பூங்கா அமைக்கப்படும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.