சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தேசிய தலைவர் சாம் ஏசுதாஸ், தஞ்சாவூர் அருகே தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவியின் மரண வாக்குமூலம், சிறுமியின் பெயர் மற்றும் முகவரியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்தார்.
மேலும், மதமாற்றம் தூண்டுதல் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பொய்யாகப் பரப்பி, மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் அண்ணாமலை செயல்படுகிறார். மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை, நீதியரசர் வாக்குமூலம், காவல்துறையினர் அறிக்கை என அனைத்திலுமே மதமாற்றம் என்ற வார்த்தை தெரிவிக்காத நிலையில், பாஜக தலையீட்டால் மதமாற்றம் என்ற பிரச்சனை வந்ததாக அவர் கூறினார்.
மத கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் அண்ணாமலையை கைது செய்து, மாணவியின் மரண வாக்குமூலம் எடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: Padma awards 2022: பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷண், சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிப்பு