சென்னை: தாம்பரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாநகராட்சியை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த புது மாநகராட்சிக்கு காவல் ஆணையாளராக ரவி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, காவல் ஆணையரகம் மற்றும் மாநகராட்சி அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வதில், அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் காவல் ஆணையரகம் கட்டும் வரை செம்பாக்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை தற்காலிக காவல் ஆணையர் அலுவலகமாக செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்காலிகமாக இயங்க உள்ள அலுவலகத்தை நேற்று (அக்.23) தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தாம்பரம் காவல் ஆணையாளர் ரவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு குறைவில்லாமல் பேருந்துகள் - ராஜகண்ணப்பன்