சென்னை: சாகித்ய அகாடமி விருது (Sahitya Akademi Award) சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படும் மிகப்பெரிய கௌரவ மிக்க விருதாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருது சிறார்களுக்கான படைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
தமிழ் நூலுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ’ஆதனின் பொம்மை' என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த நூலை உதயசங்கர் என்ற எழுத்தாசிரியர் எழுதியுள்ளார். இவர் கோவில்பட்டியில் 1960ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இலக்கியப் படைப்புகள் சிறார்களை சார்ந்து எழுதுவதில் வல்லமை கொண்டவர்.மேலும் குழந்தைகளுக்கான கதை, நாவல், பாடல்கள் என அனைத்தையும் எழுதி வருகிறார். இவர் நாவல்களை 1978 முதல் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது வரை தமிழில் 8 சிறுகதைத் தொகுப்புகள், 7 கட்டுரைத் தொகுப்புகள், மற்றும் மலையாளத்திலிருந்து 7 தொகுப்புகள் ஆங்கிலத்திலிருந்து 3 மொழிபெயர்ப்பு நூல்கள், 5 கவிதைத் தொகுப்புகள்,ஒரு குறு நாவல் தொகுப்பு என இவர் எழுதிய படைப்புகள் வெளிவந்துள்ளன.இவர் மாயாவின் பொம்மை, புலிக்குகை மர்மம், பொம்மைகளின் நகரம் போன்ற குழந்தை இலக்கியங்களை எழுதியுள்ளார்.இவர் படைப்புகள் அனைத்தும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி படிப்பதற்கு எளியவாறு இருக்கும்.
இந்நிலையில்,இவர் எழுதிய ’ஆதனின் மொம்மை' என்ற நாவலுக்குப் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கீழடி அகழாய்வு ஆராய்ச்சி மூலம் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்வியல்களை நாம் அறிந்து கொண்டு வருகிறோம்.மேலும் அந்த கால கட்டத்தில் மக்கள் எவ்வாறு இருந்திருப்பார்கள்? மேலும் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று நிகழ்வுகள் எப்படி இருந்திருக்கும்? மேலும் நம்முடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்ற கேள்விகளுக்கு விடைகளை தருகிறது ’ஆதனின் மொம்மை'நாவல்.
மேலும், உதயசங்கர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கழக சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளராக பணி புரிகிறார். இவர் சிறுகதை தொகுப்புகள், கவிதை, கட்டுரை, குழந்தை இலக்கியங்கள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர். எனவே 'ஆதனின் பொம்மை' நாவல் மூலம் நமது வரலாற்றையும் தொன்மையையும் கதை வழியாக சிறுவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.குழந்தைகளுக்கேன பல நாவல்களை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று,' திருகார்த்தியில்'என்ற சிறுகதை நாவல் எழுதிய எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.யுவ புராஸ்கார் விருது என்பது இலக்கியத்திற்கு சேவை புரியும் இளையோருக்கு வழங்கப்படும் விருதாகும்.இதுதொடர்பாக ராம் தங்கம் கூறுகையில், விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல விருதுகள் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.’
இதையும் படிங்க:Bus Driver Sharmila: கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா டிஸ்மிஸ்.. பஸ் உரிமையாளர் விளக்கம் என்ன?