ETV Bharat / state

நீட் தேர்வு - மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டி விதிமுறைகள்!

author img

By

Published : Sep 11, 2021, 7:49 PM IST

தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்.12) 1 லட்சத்து 12 ஆயிரத்து 889 மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

NEET exam
NEET exam

சென்னை : நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை (செப்.12) நடைபெறவுள்ள நிலையில் சென்னையில் உள்ள நீட் தேர்வு மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கரோனா விதிமுறைகளை பின்பற்றும் விதமாக மாணவர்களுக்கு தனி நபர் இடைவெளிக்கான வட்டம் வரையப்பட்டு பள்ளி வாளகத்தில் கிருமி நாசினி, வெப்பமானிகள் வைக்கப்பட்டு தேர்வர்களின் பெயர்,தேர்வுக் கூட விவரங்கள் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

தேர்வறைக்கு கால்குலேட்டர், உணவுப் பொருட்கள், வாலட்கள், நொறுக்குத் தீனி உள்ளிட்டவற்றை எடுத்து வர அனுமதி கிடையாது. நகைகள், கைக்கடிகாரம், கூலிங் கிளாஸ் வகை கண்ணாடிகளை அணிந்துவரக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டுள்ளன.

மேலும், பேனா உள்ளிட்ட எழுதுகோல்் எடுத்து செல்ல மாணவர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் ஹால் டிக்கெட் , அடையாள அட்டை, புகைப்படம் மட்டுமே தேர்வு அறைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்கிற விவரமும் ஒட்டப்பட்டுள்ளன.

விண்ணப்பித்த மாணவர்களின் விவரம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தமிழ்நாட்டில் நாளை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வினை 40 ஆயிரத்து 376 மாணவர்களும், 70 ஆயிரத்து 594 மாணவிகளும், திருநங்கை ஒருவரும் என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் எழுதுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் அரசு பள்ளியில் படித்த 8 ஆயிரத்து 727 மாணவர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 3 ஆயிரத்து 161 மாணவர்களும் என 11 ஆயிரத்து 888 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 889 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ள நிலையில் சென்னை மண்டலத்தில் 33 மையங்களில் 17 ஆயிரத்து 996 மாணவர்கள் நாளை நீட் தேர்வு எழுதுகின்றனர்.

காலணிகள் மட்டுமே அணிய அனுமதி

நாளை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது. பேனா,முகக்கவசம் எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும். தேர்வு நடைபெறும் மையங்கள் இன்று(செப்.11) முதல் மூன்று நாள்கள் தேசிய தேர்வு ஆணைய முகமையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

தேர்வெழுதும் மாணவ மாணவியர் இறுக்கமான உடை அணிய அனுமதியில்லை. தளர்வான உடைகளே அணிந்து வர வேண்டும். மாணவர்கள் முழுக்கை சட்டை அணிய அனுமதி இல்லை. அரைக்கை சட்டையே அணிந்து வர வேண்டும்,ஷு, ஹீல்ஸ் அணிய அனுமதி இல்லாத நிலையில் காலணிகள் மட்டுமே அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ’ விரைவில் 4000 மெகாவாட் சூரிய மின் ஒளித்திட்டம்’ - செந்தில் பாலாஜி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.