ETV Bharat / state

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு - இரண்டு வாரங்களில் ரூ.1.68 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்! - காவல்துறை அதிரடி

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் 1.68 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கு- ரூ.1.68 கோடி மேல் அபராதம்- சென்னை காவல்துறை

author img

By

Published : Feb 5, 2023, 8:35 PM IST

சென்னை: பெருநகரம் காவல் துறை விபத்தைக் குறைக்கும் வண்ணம் இருசக்கர வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே, மது போதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

அபராதத் தொகை ரூ.10,000 என்பது அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. ஆனால், நீதிமன்றத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நாட்களில் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபராதம் செலுத்துவதில்லை. இதன் காரணமாக 8,227 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

எனவே, இதுபோன்ற விதிமீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னையில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் மூலம் தகவல் தெரிவித்து கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை நேரில் 7 நாட்களில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்விளைவாக சென்னை போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்களின் அழைப்பை ஏற்று 358 பேர் ஆஜராகி அவர்களது நிலுவை வழக்குகளை இணையதளம் மூலம் செலுத்தினார்கள். மேலும், பலர் அழைப்பு மையங்களுக்கு வெளியில் பணம் செலுத்தியதால் அவர்கள் வேறுவிதமாக அபராதம் செலுத்தியிருந்தாலும் அழைப்பு மையங்களின் உதவியுடன் முடிந்த வழக்குகளின் விவரங்களையும் அபராதத் தொகையையும் இந்த அழைப்பு மையங்களில் இருந்து சேகரித்தனர்.

இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் 10 அழைப்பு மையங்களில் 843 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.87,13,000/ செலுத்தப்பட்டன. கடந்த வாரம் அழைப்பு மையங்களில் இதேபோன்ற நடவடிக்கைகளால் 785 வழக்குகள் தீர்க்கப்பட்டு, 81,85,500/- ரூபாய் அபராதம் தொகை செலுத்தப்பட்டன.

இவ்வாறு கடந்த இரண்டு வாரங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 1,628 மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் தீர்க்கப்பட்டு 1 கோடியே 68 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

மேலும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும் அசையும் சொத்துகள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

ஏற்கனவே இதுபோன்று மது போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கு இதுவரை 319 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்த செயல்பாட்டில் உள்ளன என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பள்ளி மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்த விவகாரம்: தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.