சென்னை: இதுதொடர்பாக தமிழ்நாடு வெளியிட்டுள்ள அரசாணையில், "ஊரகப்பகுதிகளில் நிலத்தடி நீர்வளத்தை உயர்த்தவும் மேம்படுத்தவும் ரூ.683 கோடி மதிப்பில் 10,000 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. ஊரகப்பகுதிகளில் விவசாயிகளின் வசதிக்காக ரூ.1346 கோடி மதிப்பில் சுமார் 4000 கி.மீட்டர் தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்பட உள்ளது. ஊரகப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு செய்ய 350 கி.மீ தொலைவிற்கு வடிகால் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
ஊரகப்பகுதிகளை பசுமையாக்கவும் சூழலை பாதுகாக்கவும் ரூ. 293 கோடி மதிப்பில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் 59 கோடி மதிப்பில் 500 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்படும்" என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கழிவறை கட்ட 36 கோடி ரூபாய் டெண்டர்