தமிழ்நாட்டில் கரோனா வைரசின் பரவல் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் சென்னையில் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்துவரும் காரணத்தால் அங்கு முழு உரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் தனிமைப்படுத்தும் முகாம்களிலிருந்து வீடு திரும்பும் ஏழை மக்களுக்கு 1,000 ரூபாய் வழங்க 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதேபோல் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யும் தன்னார்வலர்களுக்கு நாள்தோறும் 500 ரூபாய் வழங்கவும், 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று உதவி செய்ய 6,720 தன்னார்வலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.