ETV Bharat / state

Save Life: சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.5000 பரிசு - தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசாக வழங்கப்படும், ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும் எனத் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ 5000 பரிசு

author img

By

Published : Nov 27, 2021, 6:17 PM IST

சென்னை: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பொன்னான நேரத்தில் (golden hour) அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தின் படி பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000 பரிசாக வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஒரு நபருக்கு 5 முறை பரிசு

ஒரு ஆண்டில் அதிகபட்சம்  ஒரு நபருக்கு 5 முறை பரிசு

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசரக்கால உதவியினை பொதுமக்கள் செய்யவேண்டும் என்பது ஆகும். இதன்படி, ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும்.

சாலை விபத்து நடந்த பின் காவல்துறையினர் அவ்விடத்தைப் பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகிலுள்ள மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிப்பர்.

அனைத்து விபத்துக்களும் மாவட்ட ஆட்சியரது தலைமையின் கீழ் இயங்கும் " மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக் குழு " ஆய்வு செய்யும். இதில் தெரிவு செய்யப்படும் நபருக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகை வழங்குவதற்காகப் போக்குவரத்துத் துறை ஆணையருக்குப் பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :புதிய வகை கரோனா வைரஸை தடுக்க நடவடிக்கை - மா. சுப்பிரமணியன்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.