சென்னை: கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் சென்னை காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முகக்கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களிடம் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று முதல் முகக்கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களிடம் 500 ரூபாய் அபராத தொகை வசூல் செய்யப்படும் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக அதிக மக்கள் கூடும் இடங்களான மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என சென்னை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வாகன ஓட்டிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்லும் நபர்களிடம் கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் இரண்டு ஒப்பந்ததாரர்கள் தொடர்பாக 45-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு