சென்னை: வேளச்சேரி பிரதான சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுசிலா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பிரபல தனியார் நகைக் கடைக்கு சொந்தமான வேனை நிறுத்தி அலுவலர்கள் சோதனையிட்டனர். அதில் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் வேனில் இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, நகைக்கடை ஊழியர்கள் உரிய ஆவணங்களை காட்டாததால், தேர்தல் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்படும்பட்சத்தில், நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராக தயார்! - மு.க.ஸ்டாலின்