ETV Bharat / state

செஸ் வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 லட்சம் மருத்துவ காப்பீடு வசதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Jul 27, 2022, 5:01 PM IST

ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு வீரர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 லட்சம் மருத்துவ காப்பீடு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செஸ் வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வசதி -  அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள விளையாட்டு அரங்கை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " நாளை மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 44 ஆவது சர்வதேச ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெறவுள்ளது. விளையாட்டு வீரர்கள் உண்ணும் உணவு குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஏற்கனவே பரிசோதனை செய்து வருகின்றனர். 51 உணவகங்களுக்கு ஹைஜீனிக் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு தலையில் முடி கொட்டாமல் இருக்க, தலை கவசம் அணியும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

66 சாலையோர உணவகங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடுதியிலும் அவரவர் தேவைக்கு ஏற்ப, ஆங்கிலம் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யபட்டு உள்ளது. இந்திய மருத்துவத் துறை சார்பில் யோகா பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

256 உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவு குறித்து பணியை மேற்கொள்வர். 15 நாட்களுக்கு இந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கொசு தொந்தரவு இல்லாமல் இருக்க அந்த அந்த சம்பந்தபட்ட பணியில் உள்ளவர்கள் பணியில் ஈடுபடுத்த பட உள்ளனர். விளையாட்டு வீரர்களுக்காக இந்த அரங்கத்தை சுற்றி 30 அவசர ஊர்திகள் தயாராக உள்ளது.

21 விடுதிகளுக்கு வேண்டி 8 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த போட்டி நடக்கும் இடத்தில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருத்துவ நிபுணர், எலும்பு சிகிச்சை நிபுணர் என 24 மணிநேரம் இயங்க பட உள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு திட்டம் வழங்கும் பொருட்டு, விளையாட்டு வீரர்களுக்கு அவசர உதவி தேவை பட்டால், மாமல்லபுரம் சுற்றியுள்ள 13 பல சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள காப்பீடு அட்டை வழங்க பட உள்ளது.

அவர்கள் 2,00,000 மதிப்பிற்கு உள்ளான சிகிச்சைகளை இந்த மருத்துவமனைகளில் சென்று மேற்கொள்ளலாம். விமான நிலையங்களில் இருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை என்கிற வகையில் முகம் மற்றும் முழங்கை கீழே, ஏதாவது கொப்பளங்கள் இருக்கிறதா என அனைத்தையும் கண்டறிந்து, அவர்களுக்கான சாம்பில்களை எடுத்து, ஆய்வகங்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மகப்பேறு மருத்துவர்கள் இந்த வளாகத்தில் உள்ளனர், எனவே அவர்களுக்கு அவசர தேவைக்கான சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொருவருக்கும் தேவையான மருத்துவ பாதுகாப்பு சேவைகளை பெறுவதற்காக அவர்களுக்கு ஒரு மருத்துவ சேவை புத்தகம் வழங்கப்படும். அதனை பயன்படுத்தி, அவரவர் தங்கும் விடுதியில் கூட, புத்தகத்தில் உள்ள எண்னை பயன்படுத்தி, மருத்துவ சேவைகளை பெறலாம்" என அவர் பேசினார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டிற்கு புத்தொழில் சூழமைவிற்கான "லீடர்"விருது - முதலமைச்சர் வாழ்த்து!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.