ETV Bharat / state

விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியவர்களிடம் ரூ 2 லட்சம் அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி - chennai police

விதிகளை மீறி பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டியவர்களிடம் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

விதிகளை மீறி விளம்பரம் செய்த 161 நபர்களுக்கு அபராதம்

author img

By

Published : May 18, 2022, 10:22 AM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 471 பேருந்து சாலைகள் மற்றும் 34640 உட்புற சாலைகள் உள்ளன. இந்தச் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள பெயர் பலகைகளில் சேதமடைந்த பெயர் பலகைகள் மற்றும் பெயர் பலகை இல்லாத சாலைகள் அல்லது தெருக்களில் மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் சாலை (அ) தெருவின் பெயர், வார்டு எண், பகுதி எண், மண்டல எண், அஞ்சல் குறியீடு கூடிய பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்தப் பெயர் பலகைகளில் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் போன்ற விளம்பரங்கள் செய்யக்கூடாது. அவ்வாறு விளம்பரங்கள் செய்தாலோ அல்லது பெயர் பலகையை சேதப்படுத்தினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், மார்ச் 28 முதல் நேற்று(மே17) வரை பொது இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் இதர விளம்பரங்கள் மேற்கொண்ட நபர்களுக்கு ரூ.2,03,760/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் 161 புகார்கள் பதியப்பட்டுள்ளன என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று சுவரொட்டிகளை தவிர்க்குமாறும் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் விதிகளை மீறி கழிவுநீரை வெளியேற்றி வந்த 1,683 இணைப்புகள் அகற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.