இன்று (அக். 17) அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையத்தில் துபாயிலிருந்து இரண்டு வந்தே பாரத் மீட்பு விமானமானது 132 பயணிகளுடன் வந்தன. பயணிகள் அனைவரையும் சுங்கத் துறையினா் சோதனையிட்டனா். அப்போது சென்னை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஆந்திரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 14 பயணிகள் மீது சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவா்களின் உடமைகளைச் சுங்கத் துறையினா் முழுமையாகச் சோதித்தும் ஏதும் சிக்கவில்லை. பின்னர் அவா்களைத் தனித்தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று முழுமையாகச் சோதனையிட்டனா். அப்போது அவா்களின் உள்ளாடைகள், உடல்களுக்குள் தங்கத்தை மறைத்துவைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா்.
14 பேரிடமிருந்தும் ரூ.2.16 கோடி மதிப்பிலான 4.14 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினா் கைப்பற்றினா். இது தொடர்பாக மூன்று பயணிகளைக் கைதுசெய்த சுங்கத் துறையினா், மற்றவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு வழியே கேரளாவுக்கு கஞ்சா கடத்தல்!