சென்னை - ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் மூவர் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதாக தேர்தல் அலுவலர்களுக்குப் புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த பிரேம், டில்லி பாபு, சரஸ்வதி அம்சவேணி ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 110 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பெட்ரோல் நிலைய மேலாளரிடம் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இறுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுகவினர் மூவரையும் ஆவடி காவல் நிலையத்தில் தேர்தல் அலுவலர்கள் ஒப்படைத்துப் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் கரோனா... 6 மாதத்திற்குப் பிறகு அதிகபட்ச ஒரு நாள் தொற்று பாதிப்பு