ETV Bharat / state

‘கோயில் பணியாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்’- இந்து அறநிலையத் துறை அறிவிப்பு!

சென்னை: திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணை கொடை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்து அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் பணியாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்

author img

By

Published : Jan 7, 2021, 1:21 PM IST

திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பொங்கல் கருணைக் கொடை ஆயிரம் ரூபாய் முழுநேரம் , பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்பட முதுநிலை மற்றும் முதுநிலையல்லாத அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் 2019-2020ஆம் ஆண்டிற்கு வழங்கிட அனுமதியளிக்கப்படுகிறது.

இந்து அறநிலைத்துறை வெளியிட்ட அறிக்கை
இந்து அறநிலைத்துறை வெளியிட்ட அறிக்கை

2019-2020ஆம் ஆண்டில் 240 நாள்களும் அதற்கு மேலும் பணிபுரிந்த பணியாளர்களுக்கு கருணைக் கொடையாக ஆயிரம் ரூபாயும் , 2019-2020ஆம் ஆண்டில் ஆறு மாதங்களுக்கும் மேல் 240 நாள்களுக்குள் பணியாற்றிய பணியாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த நாள்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு இத்தொகையினை வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோயில்கள் மீது தொடர் தாக்குதல் - விழிப்புடன் இருக்க அலுவலர்களுக்கு ஆந்திர முதலமைச்சர் அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.