ETV Bharat / state

சுற்றுலாத்துறைக்கு ரூ.100 கோடி : பட்ஜெட்டில் ஓபிஎஸ் தகவல் - Rs 100 crore for tourism

சென்னை: தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சுற்றுலாத் தளங்களை உலக தரத்திற்கு உயர்ந்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ops - budget
author img

By

Published : Feb 8, 2019, 11:44 AM IST

2019 - 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது, தமிழகத்தில் சுற்றுலாத் தளங்களை தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருதாக தெரிவித்த அவர், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மாமல்லபுரம் ஆகிய சுற்றுலாத் தளங்களில் உள்ள உணவகங்கள், விடுதிகளின் தரம் உயர்த்தப்படும் என்றார்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவதால், அவர்களின் நலன் கருதி 2019-2020 ஆம் நிதியாண்டி சுற்றுலாத் துறைக்கென 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Intro:Body:

tamilnadu

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.