ETV Bharat / state

கிரெடிட் கார்டு பாயிண்டுகளை பணமாக மாற்றுவதாகக் கூறி ரூ. 1.50 லட்சம் மோசடி! - எஸ்பிஐ கிரெடிட் கார்டு மோசடி

சென்னை: கிரெடிட் கார்ட் பாயிண்டுகளைப் பணமாக மாற்றி தருவதாக கூறி, வங்கி அதிகாரிகள் போல் பேசி பணத்தை கொள்ளையடித்த கும்பல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Money laundering using credit card
தனியார் ஊழியர் கிரெடிட் கார்டில் பண மோசடி
author img

By

Published : Jul 24, 2020, 10:34 AM IST

சென்னை போரூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரவீன். இவர் தனது மனைவி பெயரில் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வாங்கியுள்ளார். இதையடுத்து, எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி பெண் ஒருவர் பிரவீன் மனைவியிடம் புதன்கிழமை இரவு(ஜூலை 22) தொடர்புக் கொண்டுள்ளார்.

அப்போது உங்கள் கிரெடிட் கார்டுகளில் உள்ள பாயிண்டுகளை பணமாக மாற்றி, வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவதாகக் கூறியுள்ளார். முதலில் சந்தேகப்பட்ட பிரவீனின் மனைவி, வங்கி அதிகாரி என்று போனில் பேசிய பெண்ணிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து கரோனா காரணமாக எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் வீட்டிலிருந்து வேலை செய்வதாகவும், மேலும் எந்தெந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார், எவ்வளவு கிரெடிட் கார்டுகள் வைத்துள்ளார் என்ற தகவல்கள் முழுவதையும் பிரவீன் மனைவி தெரிவித்துள்ளார்.

தனியார் ஊழியர் கிரெடிட் கார்டில் பண மோசடி

இதனால் நிஜமாகவே வங்கியில் இருந்துதான் தொடர்பு கொண்டுள்ளனர் என்று அவர் நம்பியுள்ளார். பின் கிரெடிட் கார்டு பாயிண்டுகள் பணமாக மாற்றுவதற்காக ஓடிபி ஒன்று அனுப்புவதாகக் பெண் வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார். பிரவீன் மனைவி அந்தக் ஓடிபி எண்னை மறுமுணையில் தெரிவித்தவுடன், சிறிது நேரத்துக்குப் பிறகு அவரது கிரெடிட் கார்டில் இருந்து சிறிது சிறிதாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து இந்த மோசடி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக பிரவீன் புகார் அளித்துள்ளார். தந்தையின் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த பணத்தை ஏமாற்றியுள்ளதாகவும், வங்கியிலும் முறையாக நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கரோனா காலத்தில் காவல் துறையினரையும், வங்கியையும் அணுக முடியாமல் பணத்தை இழந்து தவிப்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, எஸ்பிஐ கிரெடிட் கார்ட் வாடிக்கையாளர் சேவை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்படும் என்பதை தெரிந்து, அதன்பின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டில் உள்ள பணத்தை மோசடி செய்து எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பிரபல ரவுடிகள் 6 பேர் ஆயதங்களுடன் கைது: 5 கிலோ கஞ்சா பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.