ராயபுரம் தொகுதியில் முதன் முறையாக திமுக சார்பில் போட்டியிடும் ஜ. ட்ரீம் மூர்த்தி பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.ரோட்டில் திறந்தவெளி ஆட்டோவில் நின்றபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த்து பேசிய அவர், ”25 ஆண்டுகளாக ராயபுரம் மக்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எதுவும் செய்யவில்லை. அவர் மயிலாப்பூரிலே இருந்தால் போதுமானது. நிச்சயமாக இந்த தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கம்!