ETV Bharat / state

ராயல் என்ஃபீல்ட் வாகனம் திருட்டு - royal enfield bike

புதுவண்ணாரப்பேட்டையில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ராயல் என்ஃபீல்ட் வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயல் என்ஃபீல்ட் வாகனம் திருட்டு
ராயல் என்ஃபீல்ட் வாகனம் திருட்டு
author img

By

Published : Jul 5, 2021, 12:51 PM IST

Updated : Jul 5, 2021, 1:01 PM IST

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பரத். நேற்றிரவு (ஜூலை.04) அவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராயல் என்ஃபீல்ட் வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். தொடர்ந்து இரண்டு சக்கர வாகனம் திருட்டு போனது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பரத் புகார் அளித்தார்.

ராயல் என்ஃபீல்ட் வாகனம் திருடப்படும் சிசிடிவி காட்சிகள்

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ராயல் என்ஃபீல்ட் வாகனத்தை மற்றொரு மோட்டார் சைக்கிளைக் கொண்டு திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

தற்போது இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அடிக்கடி இது போல் இரண்டு சக்கர வாகனங்கள் திருடப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கஞ்சா வியாபாரியை பிடிக்க சென்ற போலீஸை சுற்றிவளைத்த கும்பல்

Last Updated : Jul 5, 2021, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.