ETV Bharat / state

வாகனச் சோதனையில் சிக்கிய ரவுடியின் கூட்டாளி... இப்போது புழலில்!

author img

By

Published : Mar 5, 2020, 6:55 PM IST

சென்னை: தாம்பரம் அருகே பிரபல ரவுடியின் கூட்டாளியைக் கைது செய்த காவல் துறையினர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

rowdy nedungundram Surya's partner Gajendran arrested in tambaram

சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் தலைமைக் காவலரிடம், நிலம் வாங்கித்தருவதாகக் கூறி அதே பகுதியைச் சேர்ந்த கஜா என்கிற கஜேந்திரன் (30) என்பவர் 23 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். ஆனால், அவர் நிலம் வாங்கித் தராமல் ஏமாற்றியதால் காவலர், பீரக்கன்காரணை காவல் துறையினரிடம் புகாரளித்தார் .

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்ததில், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளி கஜேந்திரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து கஜேந்திரனைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பீர்க்கன்காரணை காவல் துறையினர் சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.

பின்னர் அந்தக் காரை ஓட்டிவந்தது கஜேந்திரன் என்று காவல் துறையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து கஜேந்திரனைக் கைது செய்து அவரிடமிருந்து கார், கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். தாம்பரம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: துப்பாக்கித் தோட்டாக்கள் மாயம்; நகைக்கடை பாதுகாவலர் புகார்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.