ETV Bharat / state

சென்னையில் பழிக்குப் பழியாக ரவுடி வெட்டி படுகொலை - rowdy murder

சென்னையில் பழிக்குப் பழியாக ரவுடியை ஆட்டோவிலேயே வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரவுடி வெட்டி படுகொலை
ரவுடி வெட்டி படுகொலை
author img

By

Published : Aug 26, 2022, 10:27 PM IST

சென்னை அமைந்தகரை என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவன் சந்தீப் குமார் (29). A கேட்டகரி ரவுடியான இவன் மீது அயப்பாக்கம் காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆட்டோ ஓட்டநராக பணியாற்றி வந்த ரவுடி சந்தீப் குமார் இன்று மாலை இந்திரா நகர் நடுவன்கரை பாலம் அருகே தனது ஆட்டோவை நிறுத்தி ஆட்டோவில் இருந்தபடியே கஞ்சா புகைத்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் சந்தீப் குமாரை தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அண்ணா நகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் உயிரற்றுக் கிடந்த ரவுடி சந்தீப் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ரவுடி சந்தீப் குமார் மற்றும் கூட்டளிகளால் கொல்லப்பட்ட மற்றொரு ரவுடியான ஆதித்யா என்பவனின் கொலைக்கு பழிக்குப் பழிவாங்க இந்த கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த கொலையில் ஆதித்யாவின் கூட்டாளிகளான ரஞ்சித், அரவிந்த் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்துக்கு அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பியோடிய கும்பலை அண்ணா நகர் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைய முயற்சி செய்வேன்.. இயக்குநர் பாக்யராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.