ETV Bharat / state

தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கேட்ட நபர் வெட்டிக் கொலை:குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

சென்னை: ஆவடி அருகே போதையில் அரட்டையடித்த நபர்களை தட்டிக்கேட்ட நபரைக் கொலை வழக்கில் கைதான ரவுடிக்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

கொலை வழக்கில் கைதான ரவுடிக்கு ஆயுள் தண்டனை

author img

By

Published : Mar 4, 2021, 5:59 AM IST

சென்னை ஆவடி ஸ்ரீதேவி நகர் கலங்கல் தெருவைச் சேர்ந்தவர் காசிலிங்கம் (50). இவரது வீட்டின் அருகே, ஆவடி காமராஜ் நகரைச் சேர்ந்த சரவணன் என்ற கட்லா சரவணன் (33), சத்யா (24) ஆகிய இருவரும் அடிக்கடி மது, கஞ்சா போதையில் அரட்டையடித்து வந்தனர். ரவுடிகளான இவர்கள் இருவர் மீதும் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், வீட்டின் அருகில் போதையில் அரட்டையில் ஈடுபட்டதால் இவர்கள் இருவரையும் காசிலிங்கம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால், இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையடுத்து, 2014 ஆம் ஆண்டு ஜன.5 ஆம் ஆண்டு சரவணன், சத்யா ஆகிய இருவரும் சேர்ந்து காசிலிங்கத்தை முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி காவல் துறையினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, இருவரும் பிணையில் வெளியே வந்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய சத்யா ஆந்திராவில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியிலுள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மூன்றில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்றுமுன் தினம் (மார்ச் 02) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ் தீர்ப்பு வழங்கினார். சரவணன் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.