ETV Bharat / state

ஸ்கிம்மர் கருவி பொருத்தி பல கோடி ரூபாய் கொள்ளை - 3 பேர் கைது - skimmer tool

ஸ்வைப் மிஷினில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பல கோடி ரூபாய் கொள்ளையடித்து அதை பிட்காயின் மூலம் முதலீடு செய்த கொள்ளை கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஸ்கிம்மர் கருவி பொருத்தி பல கோடி ரூபாய் கொள்ளை

author img

By

Published : Jul 15, 2021, 12:15 PM IST

சென்னை: முட்டுக்காடு பகுதியில் நீலாங்கரை காவல்துறையினர் நேற்று (ஜூலை 14) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை செய்தனர்.

விசாரணையில் மூன்று பேரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் காரை சோதனை செய்ததில் ஏராளமான ஏடிஎம் கார்டுகள், ஸ்கிம்மர் கருவிகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

விசாரணயில், திருச்சியை சேர்ந்த லாவா சந்தன் (30), பிரவீன் கிஷோர் (30), திண்டுக்கல்லைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுசா(37) என தெரியவந்தது.

அதில் லாவா சந்தன், ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி பொதுமக்களின் தகவல்களைத் திருடி, போலி ஏடிஎம் கார்டு தயாரித்து பணம் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை கோயம்புத்தூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 2017 ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளி வந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதும் தெரிந்துள்ளது.

இவர்களில் சிக்கந்தர் பாதுசா, ஏடிஎம் கார்டு மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் ஸ்வைபிங் மிஷினில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

பிட்காயின் மூலம் முதலீடு

மேலும் திருடிய பணத்தை பாதுசா பிட்காயின் போன்ற ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, சம்பாதித்த பணத்தை கூட்டாளிகளுடன் பங்கு பிரித்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கத்தி முனையில் இளைஞரிடம் செல்போன் பறிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.