ETV Bharat / state

சுமார் ரூ.1 லட்சம் பணம்... ரூ.4 லட்சம் கேமரா - தயாரிப்பாளர் அலுவலகத்தில் கொள்ளை!

சென்னை: சினிமா தயாரிப்பாளர் அலுவலகத்திலிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம், கேமரா, சாமி சிலை ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jul 19, 2020, 10:36 AM IST

சினிமா தயாரிப்பாளர் அலுவலகம்
சினிமா தயாரிப்பாளர் அலுவலகம்

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் சினிமா தயாரிப்பாளர் சிவா(51). இவர் வளசரவாக்கம், குகன் தெருவில் சினிமா தயாரிப்பு அலுவலகம் வைத்து நடத்திவருகிறார். நேற்று வழக்கம் போல் பணிக்குச் சென்ற ஊழியர்கள், அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதன்பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணம், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, 250 கிராம் எடை கொண்ட வெள்ளியாலான சாமி சிலை ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து வளசரவாக்கம் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போரூர் உதவி ஆணையர் மகிமை வீரன், ஆய்வாளர் அமுதா ஆகியோர் அலுவலகத்தைச் சோதனை செய்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்து, அதனடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கடையில் வைத்திருந்த கல்லாப்பெட்டி திருட்டு: சிசிடிவி பதிவுகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.