சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலையில் எஸ்பிஐ வாங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகே எஸ்பிஐ ஏடிஎம் மையம் உள்ளது. இந்நிலையில், வங்கியின் மேலாளர் முரளி பிரபு என்பவர் ஏடிஎம் மையத்திற்கு சென்று கணக்கை சரிபார்த்தபோது, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, சிசிடிவி காட்சிகளை கொண்டு சோதனை செய்தனர். அதில், இளைஞர்கள் ஏடிஎம்மில் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அதேபோன்று, விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் பல லட்சம் ரூபாய் நூதன முறையில் கொள்ளையடிக்கப்படுவதாக காவல் துறையில் புகார்கள் குவிகின்றன.
தற்போது, சிசிடிவி காட்சிகளை வைத்து ராமாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் போக்சோவில் கைது!