ETV Bharat / state

தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன விற்பனையகத்தில் கொள்ளை - சென்னை மாவட்ட செய்திகள்

தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் டெமோ விற்பனையகத்தில் மர்ம நபர்கள் புகுந்தனர். கடையை மூடி ஊழியரை கத்தியால் வெட்டிவிட்டு பணம், நகை, ஆடைகளை கொள்ளையடித்து சென்றனர்.

தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன விற்பனையகத்தில் கொள்ளை

author img

By

Published : Oct 28, 2022, 7:11 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் கேளம்பாக்கம் சாலை புதுப்பாக்கத்தில் பி.எஸ்.எக்ஸ்போர்ட் என்ற பெயரில் ஆடை தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் நுழைவு பகுதியில் ஆடை டெமோ விற்பனையகம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கு மர்ம நபர்கள் 5 பேர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு கடைக்குள் புகுந்து கடையை மூடிவிட்டு கடையில் இருந்த ஊழியர் சந்துரு (31), என்பவரை அடித்து தலையில் கத்தியால் வெட்டி, உடல் முழுவதும் கத்தியை திருப்பி வைத்து தாக்கியுள்ளனர்.

தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன விற்பனையகத்தில் கொள்ளை

பின்னர் கடையில் கல்லாவில் இருந்த 5000 ரூபாய் பணம், 2 பெட்டி ஆடைகள், சந்துரு அணிந்திருந்த 3 தங்க மோதிரம், சந்துரு வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் 10000 ரூபாய் பணத்தை அனுப்பிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் சந்துருவை மீட்டு செட்டிநாடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிளாட்சன் ஜோஸ் தலைமையில் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: Viral Video: ஆவடியில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்று கீழே விழுந்த மாணவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.