சென்னை, கொருக்குப்பேட்டை நேதாஜி நகரில் சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு கலந்துகொண்டு நேதாஜியின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதையடுத்து, அவர் சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு குறித்தும், சுதந்திரத்திற்காக எப்படி எல்லாம் பாடுபட்டார் என்பது குறித்தும் பள்ளி மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
பின்னர் சிறப்பாக பேசிய மாணவ மாணவிகளுக்கு நேதாஜியின் சிலை அமைப்புக் குழு சார்பில் சிறப்பு பரிசுகளை அவர் வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகளை கெளரவிக்கும் வகையில், தியாகிகளின் மனைவிகள், மூத்த குடிமக்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
இதையும் படிங்க: 'இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' - நல்லகண்ணு அரூரில் பேட்டி