சென்னை: வரும் ஜூலை 2ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 28:
இன்று, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வய்ப்புள்ளது.
ஜூன் 29:
நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 30:
வரும் புதன் கிழமை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 01, 02:
வரும் வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தலைநகரில் வானிலை
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
மழையளவு:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், அதிகபட்சமாக பூந்தமல்லியில் (திருவள்ளூர்) 7 செ.மீ., கொடநாடு (நீலகிரி) 6 செ.மீ., கொரட்டூர் (திருவள்ளூர் ) 5 செ.மீ., கொடுமுடி (ஈரோடு) 4 செ.மீ., சென்னை விமான நிலையம், ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), அவிநாசி (திருப்பூர்) மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) ஆகிய இடங்களில் 3 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், நடுவட்டம் (நீலகிரி), முசிறி (திருச்சிராப்பள்ளி) ஆகிய இடங்களில் 2 செ.மீ., 0ஊத்துக்குளி (திருப்பூர்), சின்னக்கல்லார் (கோவை) ஆகிய இடங்களில் 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளன.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று (ஜூன் 28) முதல் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 02) வரை தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் 5 நாட்களுக்கு மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்
இதையும் படிங்க: சென்னையில் பரவலாக மழை