ETV Bharat / state

ஆருத்ரா மோசடி வழக்கு: 2வது நாளாக ஆவணங்களுடன் ஆஜரான ஆர் கே சுரேஷ்! - todays news in tamil

Aarudhra scam: ஆருத்ரா மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் இரண்டாவது நாளாக ஆர்.கே. சுரேஷ் தொடர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

ஆருத்ரா மோசடி வழக்கு: இரண்டாவது நாளாக ஆவணங்களுடன் ஆஜரான ஆர் கே சுரேஷ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 8:51 PM IST

சென்னை: அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு மக்களை கவரும் வகையில் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. வாடிக்கையாளர்கள் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 35 ஆயிரம் ரூபாய் என பத்து மாதத்திற்கு வட்டி தரப்படும் என கூறியிருந்ததனர்.

இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ததில் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வரை முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டு நிர்வாகிகள் தலைமறைவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 40 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து 22 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் ஆருத்ரா நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களான ராஜசேகர் அவரது மனைவி மகாலட்சுமி, மைக்கேல் ராஜ், ஆர்கே சுரேஷ் ஆகியோர் துபாயில் தலைமறைவாக இருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உறுதி செய்து அவர்களை பிடிப்பதற்கு ரெட் கார்னர் நோட்டீஸை வழங்கினர்.

அதன் அடிப்படையில் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்ட ராஜசேகர் இரண்டு வாரத்திற்குள் சென்னை அழைத்து வரப்படுவதற்கான நடவடிக்கைகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நடிகரும் பாஜக நிர்வாகியமான ஆர் கே சுரேஷ் 12.5 கோடி கொடுத்ததாக முன்னதாக கைது செய்யப்பட்ட ரூசோ என்பவர் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் அவரை விசாரனைக்கு ஆஜரகும் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதி மன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நடிகர் ஆர் கே சுரேஷ் துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

இதையடுத்து நேற்று சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஏடிஎஸ்பி வேல்முருகன் முன்னிலையில் ஆஜர் ஆகினார். அவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி வேல்முருகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர் வாய் வழி மூலமாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அவரிடம் வாக்குமூலத்தை பெற்றனர்.

இதற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட ரூசோ என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் ஆர்கே சுரேஷ் இடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன இதனை தொடர்ந்து அவரிடம் சில ஆவணங்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டு உள்ளனர்.

பின்னர் விசாரணைக்கு பின்பு வெளியே வந்தஆர் கே சுரேஷ் தனக்கும் இந்த மோசடிக்கும் தொடர்பில்லை எனவும் போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று (டிச.13) அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆர் கே சுரேஷ் சில ஆவணங்களுடன் ஆஜராகி உள்ளார்.

அவரிடன் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.கே.சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை வரும் 18ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளனர்.

இதையும் படிங்க: ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு; டிச.18 முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.