ETV Bharat / state

காட்சிகள் மறையலாம் ஆனால் நினைவுகள்: பழனிசாமியின் ஆட்சி - ஒரு ரீவைண்ட் - தேர்தல் உலா

2018 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, 2019 பொள்ளாச்சி விவகாரம் என தொடர்ந்து இரண்டு வருடங்கள் நடந்தேறிய சம்பவங்கள் கொடுத்த அதிர்ச்சி அடங்குவதற்குள் 2020ஆம் ஆண்டு சாத்தான்குளத்தில் சம்பவம் ஒன்று நடந்தேறியது.

ட்ஃபச்
ஃபட்ச்
author img

By

Published : Mar 10, 2021, 7:01 PM IST

ஆட்சியைத் தொடர்வோம் என அதிமுக வரிந்துகட்ட அடுத்தது தங்கள் ஆட்சிதான் என திமுக முஷ்டி முறுக்க ஒவ்வொரு நாளும் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது. இந்த ஆட்சியே தொடருமா இல்லை திமுக ஆட்சி உதிக்குமா என்பது இன்னும் இரண்டு மாதங்களில் தெரிந்துவிடும்.

இந்தச் சூழலில் தற்போதைய ஆட்சியைத் திரும்பி பார்க்க வேண்டியது அவசியமாகிறது. 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது உற்ற தோழி சசிகலா முதலமைச்சர் ஆக முயன்ற நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றார். அவர் செல்லும்போது ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியிருந்ததால் ஈபிஎஸ்ஸை முதலமைச்சராக்கிவிட்டு சென்றார் சசிகலா.

அதற்கு பிறகு ஈபிஎஸ் தலைமையிலான ஆட்சி முழுதாக நான்கு வருடங்களை நிறைவு செய்திருக்கிறது. ஆனால், இந்த நான்கு வருடங்களை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் நிறைவு செய்திருக்கிறது பழனிசாமியின் ஆட்சி.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:

தமிழ்நாடு முதலமைச்சராக பழனிசாமி அரியணை ஏறிய ஓராண்டில் அதாவது 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி மக்கள் நடத்திய பேரணியை நோக்கி காவல் துறை ஆசுவாசமாக குறி பார்த்து சுட்டது. அதில் 13 பேர் உயிரிழந்தனர்.

சம்பவத்தை அறிந்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளித்தது. இது அராஜக ஆட்சி, கொடுங்கோல் ஆட்சி என்று எதிர்க்கட்சியினரும், சமூக செயற்பாட்டாளர்களும் போர்க்கொடி தூக்கினர். ஆனால் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் இருந்தது ஆளும் அரசு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

கொடுமையின் உச்சமாக, முதலமைச்சரும் காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவருமான எடப்பாடி பழனிசாமியிடம் துப்பாக்கிச்சூடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு மிகவும் சாதாரணமாக துப்பாக்கிச்சூடு குறித்து தான் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டதாக அலட்சியமாக பதில் சொன்னார். எத்தனையோ ஆட்சியாளர்களை பார்த்திருக்கிறோம் ஆனால் இப்படி ஒரு அலட்சியமான ஆட்சியாளரை பார்த்ததே இல்லை என நொந்துகொண்டனர் மக்கள்.

நிர்மலாதேவி பற்ற வைத்த நெருப்பு:

அருப்புக்கோட்டை கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றிய நிர்மலா தேவி மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயலும் ஆடியோ ஒன்று 2018ஆம் ஆண்டு வெளியானது.

நிர்மலா தேவி
நிர்மலா தேவி

குறிப்பாக, அந்த ஆடியோவில் கவர்னர் தாத்தா என்ற வார்த்தையை நிர்மலா உபயோகப்படுத்தியதை அடுத்து எரிந்துகொண்டிருந்த எண்ணெயில் நெய்யை ஊற்றுவது போல் ஆகிவிட்டது.

ராஜ் பவனின் பிம்பம் மேல் ஒட்டுமொத்த தமிழ்நாடும் கேள்வி எழுப்ப ஆளுநரோ உடனடியாக பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டினார். சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் ஆளுநர் பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டினார் என்று நினைத்தால் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டி புது சர்ச்சைக்கு வழி ஏற்படுத்தினார்.

நிர்மலா தேவி உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட புகாருக்கு ஆளாகியிருக்கும் ஆளுநரை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென எதிர்க்கட்சியினர் கூற, ஆளும் அரசோ வழக்கம்போல் அமைதி காத்தது.

பொள்ளாச்சியில் கொடுமையான காட்சி:

பெண்களை மதிக்கும் மாநிலம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம், ஒரு பெண் ஆட்சி செய்த மாநிலம் என பெண்களின் வளர்ச்சி, சுதந்திரம் உள்ளிட்ட விஷயத்தில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு ஒருபடி மேலே இருக்கிறது என அனைவரும் எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகார் அந்த எண்ணத்தில் தீயை வைத்தது. சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், அருளானந்தம் உள்ளிட்ட இளைஞர்கள் பல இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதை வீடியோவாக எடுத்து பணத்தையும் பறித்தது தெரியவந்தது. அதுதொடர்பான ஆடியோக்களும், வீடியோக்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அருளானந்தம் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் என்பதும் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுகவின் மிக முக்கிய புள்ளியின் பெயரும் அடிபட ஆடிப்போனது ஆளுங்கட்சி.

இதனையடுத்து இந்த விவகாரம் சிபிசிஐடிக்கு சென்று அங்கிருந்து சிபிஐக்கு வசம் சென்றது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எப்போது தண்டிக்கப்படுவார்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்திருக்க ஒருவழியாக அவர்கள் அனைவரும், இரண்டு வருடங்கள் கழித்து கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி விவகாரம்
பொள்ளாச்சி விவகாரம்

அனைத்துவிதமான ஆதாரங்களும் திரட்டப்பட்ட நிலையில் பொள்ளாச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய எதற்காக இரண்டு வருடங்கள் தேவைப்பட்டன என்ற கேள்வியும், இவ்விஷயத்தை அதிமுக அரசு நேர்மையாக அணுகவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

சாத்தான்குளத்தில் சாத்தான்களின் ஆட்டம்:

2018 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, 2019 பொள்ளாச்சி விவகாரம் என தொடர்ந்து இரண்டு வருடங்கள் நடந்தேறிய சம்பவங்கள் கொடுத்த அதிர்ச்சி அடங்குவதற்குள் 2020ஆம் ஆண்டு சாத்தான்குளத்தில் சம்பவம் ஒன்று நடந்தேறியது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜூம், அவருடைய மகன் பென்னிக்ஸும் கரோனா லாக் டவுனில் கூடுதல் நேரம் கடையைத் திறந்து வைத்திருந்தார்கள் என்று கூறி 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை காவலர்கள் கொடூரமாக தாக்கியதில் இரண்டு பேரும் உயிரிழந்தனர். 2018, 2019ஆம் ஆண்டுகளில் கொந்தளித்தது போலவே வழக்கம்போல் தமிழ்நாடு இதற்கும் கொந்தளித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸும் அனுப்பியது.

ஜெயராஜ், பென்னிக்ஸ்
ஜெயராஜ், பென்னிக்ஸ்

அதன் பிறகு இந்த வழக்கும் சிபிஐக்கு சென்றது. சிபிஐ வழக்கை கையில் எடுக்கும்வரை சிபிசிஐடி வழக்கை விசாரணைக்கு எடுத்து கொலை வழக்காக பதிவு செய்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

முக்கியமாக ஆய்வாளர் ஸ்ரீதருக்கு அதிமுகவின் முக்கிய அமைச்சர் ஒருவர் உதவியதாகவும், அவர் கைது செய்யப்படும்போது தான் அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவன் என மிரட்டும் தொனியில் பேசியதாகவும் தகவல் அப்போது வெளியானது.

இது இப்படி இருக்க அமைச்சர் கடம்பூர் ராஜூவோ, “சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்தது லாக் அப் டெத் கிடையாது. கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு நாட்கள் கழித்தே அவர்கள் உயிரிழந்தனர். காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே லாக் அப் டெத்” என்று புது விளக்கத்தை கொடுத்தார்.

கொடுமையின் உச்சமாக, ஜெயராஜூம், பென்னிக்ஸும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மட்டுமே உயிரிழந்தார் என முதலமைச்சர் பழனிசாமி ஒரு குண்டை வேறு தூக்கிப்போட்டார். மேலும், அவர்களது உடற்கூராய்வு முடிந்த நிலையில் இன்னும் அதன் அறிக்கை குடும்பத்தினரிடம் வழங்கப்படாமல் இருக்கிறது. அதனை அரசும் கண்டும் காணாமல் நகர்கிறது.

இப்போதும் காவல் துறை:

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்ததும் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை மூலம் கரும்புள்ளியை சம்பாதித்துக்கொண்ட அவர் தற்போதைய ஆட்சி நிறைவு பெற இருக்கும் சூழலிலும் அதே காவல் துறை மூலம் புதிய கரும்புள்ளியை ஏந்தியிருக்கிறார்.

அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய துறையிலேயே மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருக்கும் பெண் ஐபிஎஸ் ஒருவர் தனது உயரதிகாரியால் பாலியல் தொந்தரவை சந்தித்திருக்கிறார். அதுவும், முதலமைச்சரின் பந்தோபஸ்துக்கு சென்றுவிட்டு வந்த உயரதிகாரியை தன் மாவட்டத்தில் வரவேற்றபோதுதான் அந்த கொடுமையை அனுபவித்ததாகவும் புகாரில் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் குறித்து புகார் அளிக்கச் சென்ற அவரை செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மற்றும் ஐஜி ஒருவரும் தடுத்து நிறுத்தி அவரை சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார்கள். ஆனால் எதையும் பொருட்படுத்தாத அப்பெண் ஐபிஎஸ் தனக்கு நேர்ந்தது குறித்து டிஜிபியிடம் புகாரளித்தார்.

எதிர்க்கட்சிகள் வழக்கம்போல் குரல் எழுப்ப, இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்திருக்கிறார் தமிழ்நாடு உள்துறைச் செயலாளர். மேலும், அந்த உயரதிகாரி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட, அவரை தற்போது தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவிட்டதால் இந்த விசாரணையை பொலிட்டிக்கல் ஸ்டண்ட்டாக மாற்றாமல் நேர்மையாக விசாரணை நடைபெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

பொள்ளாச்சி விவகாரம்

இப்படி, 2017லிருந்து தற்போதுவரை எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் வருடத்திற்கு ஒரு சம்பவமாவது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதனையெல்லாம் மறந்துவிடுவார்கள் இல்லை மறந்திருப்பார்கள் என எடப்பாடி பழனிசாமியின் அரசு நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், காட்சிகள் மறைந்தாலும் மக்களிடமிருந்து நினைவுகள் மறையாது என்பதே வரலாறு.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.