ETV Bharat / state

சிதம்பரம் கோயில் சட்டவிரோத கட்டுமான விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் பொது தீட்சிதர் குழு மறுஆய்வு மனு தாக்கல்! - chidambaram temple illegal construction issue

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி பொது தீட்சிதர் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

High Court
High Court
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 10:38 PM IST

சென்னை : சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என அறநிலையத்துறை ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி பொது தீட்சிதர் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதிகளில் எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாகவும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களில் எந்த அனுமதியுமின்றி நூறு அறைகள் கட்டப்படுவதாகவும் கூறி, பொது தீட்சிதர்கள் குழுவின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி, நடராஜ் தீட்சிதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு கடந்த அக்டோபர் 17ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சிதம்பரம் நடராஜர் கோயிலின் பொது தீட்சிதர்கள் குழு மறு ஆய்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள அந்த மனுவில், "நடராஜ் தீட்சிதர், கோயில் நிர்வாகத்துடன் தொடர்பு இல்லாத இந்து சமய அறநிலையத் துறையினருடன் சேர்ந்து கொண்டு கோயிலின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், கோயிலின் நிர்வாகத்திற்கு எதிராகவும் செயல்பட்டதால் பொது தீட்சிதர் குழுவால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இதேபோன்ற புகார் அளிக்கப்பட்ட நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் வந்து வீடியோ பதிவுடன் ஆய்வு செய்ததாகவும், அதன்பின்னர் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கும், கட்டுமானங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலின் நிர்வாகத்தில் தலையிட அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில், அதை தலையிட வைக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டு, உத்தரவை பெற்றுள்ளதாகவும் பொது தீட்சிதர் குழு அந்த மனுவில் தெரிவித்து உள்ளது.

அறநிலையத்துறையின் கருவியாக செயல்படும் ஒருவர் தொடர்ந்த வழக்கில், எதிர் மனுதாரராக இருந்த தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அந்த மனிவில் கூறப்பட்டு உள்ளது. மறு ஆய்வு மனுவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை அக்டோபர் 17ஆம் தேதி பிறப்பித்த உத்தரவிற்கு தடைவிதிக்க வேண்டும் என பொது தீட்சதர் குழு இடைக்கால கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : ஒருநாளுக்கு முன்னரே தொடங்கிய வடகிழக்கு பருவமழை - வானிலை மையம் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.