சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (நவ.27) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சில தினங்களாக பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோயம்புத்தூர், கரூர், பழனி உள்ளிட்ட இடங்களில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பது குறித்தும், போக்சோ சட்டத்தைப் பொதுமக்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
![முதலமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-cmmeeting-7209106_27112021144745_2711f_1638004665_113.jpg)
போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பரிவு) கே. வன்னியபெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: Chennai Rain - பாத் டப்பை படகாக மாற்றிய மன்சூர் அலிகான்