ETV Bharat / state

'பதிவுத்துறை வருவாய் ரூ. 8,082 கோடி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது' - அமைச்சர் பி. மூர்த்தி தகவல் - வருவாய் துறை

பதிவுத்துறை வருவாய் ரூ. 8,082 கோடி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டில் இதே நாளில் எட்டப்பட்ட ரூபாய் 5,757 கோடியைவிட ரூபாய் 2,325 கோடி அதிகமாகும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Etv Bharat அமைச்சர் பி மூர்த்தி
Etv Bharat அமைச்சர் பி மூர்த்தி
author img

By

Published : Sep 22, 2022, 10:20 PM IST

Updated : Sep 22, 2022, 11:08 PM IST

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், 'பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக ஆவணங்கள் பதிவு அதிகரித்து அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பதிவு செய்ய வருவோரை ஆதார் எண் மூலம் சரி பார்த்தல், வரிசைக் கிரம டோக்கன் முறை, சரியான நிலமதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பதிவு சேவைக்காக இத்துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர்.

அனைத்திற்கும் மேலாக கடந்த காலங்களில் நடந்த மோசடிப்பதிவுகளின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணப்பதிவுகளை பதிவுத்துறையே ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறைப்படுத்துவதை முதலமைச்சர் எதிர்வரும் 28.09.2022ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்தப் பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21.09.2022 வரை 16,59,128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 8,082 கோடி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே நாளில் எட்டப்பட்ட ரூபாய் 5,757 கோடியைவிட ரூபாய் 2,325 கோடி அதிகமாகும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'என்ஐஏ தமிழ்நாட்டில் நுழையத்தடை விதிக்கவேண்டும்' - எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் முபாரக்

Last Updated : Sep 22, 2022, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.