தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக அதிகரிக்கும் உத்தரவு குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அரசாணையில் கூறியதாவது; ' கடந்த 7ஆம் தேதி அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58-லிருந்து 59-ஆக அதிகரிக்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் மே 1ஆம் தேதி மற்றும் அதற்கு முந்தைய நாள்களிலோ 58 வயதானோருக்கும், ஓய்வுபெற்ற நிலையில் மீண்டும் பணி நீட்டிப்போருக்கும் இந்த உத்தரவு பொருந்தாது.
அதாவது மே மாதத்துடன் ஓய்வுபெறும்போது கல்வியாண்டு முழுவதும் பணிநீட்டிப்பு பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்ற கல்வி பயிற்றுநர்களுக்கு இது பொருந்தாது என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பதவிகளுக்கு ஓய்வு வயது 60ஆக இருப்பது அப்படியே நீடிக்கும். அந்த வயது 61ஆக உயர்த்தப்படாது' என அதில் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ‘பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு அரசின் புதிய வழிகாட்டுதல்கள்’