ETV Bharat / state

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் நியமனம்- அரசாணை வெளியீடு - Private Schools Fee Determination Committee chairman

சென்னை: தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.‌

Private Schools Fee Determination Committee chairman

author img

By

Published : Jul 2, 2020, 10:07 PM IST

தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இதனையடுத்து நியமனம் செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன் மூன்று ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணங்களை ஒழுங்குப்படுத்தவும், பள்ளிகளின் செயல்பாட்டைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவும் 2009ஆம் ஆண்டு இக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஏற்கனவே தலைவராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி மாசிலாமணியின் பதவிக்காலம் மார்ச் மாதம் முடிந்ததால், தற்போது தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக செலுத்த தனியார் பள்ளிகள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.