ETV Bharat / state

நீட் தேர்வால் மருத்துவப் படிப்பு பாதிப்பு - ஏ.கே. ராஜன் குழுப்பணிகள் 90 விழுக்காடு நிறைவு

author img

By

Published : Jul 8, 2021, 2:42 PM IST

Updated : Jul 8, 2021, 8:06 PM IST

நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது என ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே.ராஜன்
செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே.ராஜன்

சென்னை: நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் 4ஆவது கூட்டம் இன்று (ஜூலை 08) சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தேர்வு குறித்த ஆய்வு:

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவத்துறை சிறப்புச் செயலாளர் செந்தில் குமார், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, சட்டத்துறைச் செயலாளர் கோபிநாத், மருத்துவர் ரவீந்திரநாத், ஜவஹர் நேசன், மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் நாராயண பாபு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுச் செயலாளர் வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் குழுவிற்கு வரப்பட்ட கடிதங்களின் அடிப்படையிலும், பல்வேறு தரவுகளின் அடிப்படையிலும் ஆய்வு செய்யப்பட்டு இறுதி அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்றன.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், 'நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்யும் பணிகள் 90 விழுக்காடு முடிவடைந்துவிட்டன. மிக விரைவில் மீதமுள்ள பணிகளும் முடிவடையும்.

மருத்துவப் படிப்பு சேர்க்கை:

நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவது உண்மைதான். குழுவிற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பதற்கு அரசிடம் கேட்கவில்லை. மருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மை.

செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே.ராஜன்

நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அறிக்கை தயார் செய்தாலும் அரசிடம் அளிக்க முடியாத நிலை உள்ளது.

நீதிமன்ற வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்வோம். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அரசிடம் அறிக்கைத் தாக்கல் செய்வது சரியாக இருக்காது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் - ஏ.கே.ராஜன் குழு நியமனம் தொடர்பான வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

Last Updated : Jul 8, 2021, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.