மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற அறிவிப்பை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும், அக்குழு மருத்துவப் படிப்பு சேர்க்கை நிலவரங்களை ஆய்வு செய்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு குறித்து, அரசுக்குப் பரிந்துரை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்யும் எனவும், அதனடிப்படையில் அரசு முடிவெடுத்து செயல்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக, உயர் கல்வி, பள்ளிக் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் முதன்மைச் செயலர்கள், மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலர் உள்பட மேலும் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம், சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள கலையரசன் இல்லத்தில் நாளை நடக்கிறது. இதில், எத்தனை விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுள்ளது. விரைவில், ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன், முதலமைச்சரிடம் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு: ஆய்வுக் குழு தலைவர் நியமனம் - மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு
சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.