ETV Bharat / state

ஹேக் செய்யப்பட்டது ஓய்வு பெற்ற டிஜிபி மகனின் சமூக வலைதளம் - ஹேக்

சென்னை: ஓய்வு பெற்ற டிஜிபி மகன் சமூக வலைதளம் மற்றும் ஜி மெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

hack
hack
author img

By

Published : Aug 3, 2021, 9:51 AM IST

மணப்பாக்கத்தில் உள்ள ரிவர் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் விக்ரம் ஜாங்கிட். ஓய்வுபெற்ற டிஜிபியான ஜாங்கிட்டின் மகன் ஆவார். இவர் மணப்பாக்கத்தில் விளையாட்டு மையம் ஒன்றை தொடங்கி நடத்திவருகிறார். இச்சூழலில் விக்ரம் ஜாங்கிட் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அப்புகாரில், ”எனது விளையாட்டு மையத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களான சுல்தான், சந்தோஷ் ஆகிய இருவரும் எனது அலுவலகத்தில் அனுமதியின்றி நுழைந்து, எனது கணினி மூலம் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தினர். அலுவலகத்தில் வைத்திருந்த 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தையும் திருடியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியிருந்தார்

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஜி மெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் உள்ள தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒரு புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் காவல் துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.