ETV Bharat / state

நடிகை கல்பிகா கணேஷ் மீது அவதூறு வழக்கு! - disseminating statements

பிரபல திரைப்பட இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் அவரது மனைவி தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நடிகை கல்பிகா கணேஷ்க்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 24, 2022, 7:59 PM IST

சென்னை: காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2, மண்டேலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பாலாஜி மோகனும், ஏழாம் அறிவு, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணாவும் கடந்த ஜனவரி 23ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், வெப் சீரீஸ்களில் நடிக்கும் தெலங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் என்பவர் மீது பாலாஜி மோகனும், தன்யா பாலகிருஷ்ணாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் கொடுத்த மனுவில், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கல்பிகா கணேஷ் என்பவர் யூடியூபில் அவதூறு கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அவர் இது போன்று தங்களது வாழ்க்கை குறித்து வீடியோ வெளியிட கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், மனுவுக்கு ஜனவரி 20ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி கல்பிகா கணேஷுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: புரொமோஷன்களுக்கு ஏன் வருவதில்லை? - நடிகை நயன்தாரா விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.