ETV Bharat / state

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் - ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு

author img

By

Published : Jun 22, 2021, 12:40 PM IST

Updated : Jun 22, 2021, 2:33 PM IST

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் - ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு
வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் - ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு

12:37 June 22

வேளாண் திருத்தச் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி, வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். 

வேளாண்திருத்தச் சட்டங்களை எதிர்த்து தீர்மானம்

இதற்கு குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் 3 வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்தும், சிறுபான்மை மக்கள் மிகவும் பாதிக்கக் கூடிய குடியுரிமை திருத்தச் சட்டங்களை எதிர்த்தும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும்; 

தற்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுவதால் இந்தக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற சாத்தியமில்லை என்றும்; வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: மணிகண்டனின் பிணை மனு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

Last Updated : Jun 22, 2021, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.