வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டுக்கு இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான இட ஒதுக்கீடு விபரம் தமிழ்நாடு உள்ளாட்சித் துறையால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் மாநகராட்சி பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சி பட்டியலின வகுப்பைச் சேர்ந்த (பொது) ஆண், பெண் என இருபாலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள திருச்சி, நெல்லை, நாகர்கோயில், திண்டுக்கல், கோவை, ஈரோடு மற்றும் நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் பொது பிரிவைச் சேர்ந்த (பெண்கள் மட்டும்) பெண்களுக்கான தொகுதிகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல இந்த மாநகராட்சிகளைத் தவிர்த்து மற்ற மாநகராட்சிகளான சேலம், சென்னை, திருப்பூர், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளுக்கு அனைத்துப்பிரிவைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் மேயர் பதவிகளுக்குப் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் இடம்பெறாதது ஏன்? - சஞ்சய் தத் கேள்வி