குவால்காம், இன்டெல் லேண்ட், சாம்ஸங் ரிஸர்ச் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டவர்களில், 2019-20ஆம் கல்வியாண்டில் 158 மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கான முன்அனுமதி உத்தரவுகளைப் பெற்றுள்ளனர். ஆனால் 2018-19ஆம் கல்வியாண்டில் 135 மாணவர்களே வேலைவாய்ப்பிற்கான முன்அனுமதியைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019-20ஆம் கல்வியாண்டில் மொத்தமாக 1,334 மாணவர்கள் வேலைவாய்ப்பிற்காகப் பதிவு செய்திருந்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி நடத்தப்பட்ட முதற்கட்ட வேலைவாய்ப்பு முகாமில் 20 நிறுவனங்கள் கலந்துகொண்டன. அந்நிறுவனங்கள் 147 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான முன்அனுமதி கடிதத்தை அளித்தனர். இது கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை விட 60 விழுக்காடு அதிகமாகும். மேலும் இந்தாண்டிலிருந்து வேலைவாய்ப்பு முகாமை எம்.டெக். மாணவர்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளனர்.
ஐஐடியில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமின் மூலம். கடந்த 2015-16இல் 69 மாணவர்களும், 2016-17இல் 73 மாணவர்களும், 2017-18இல் 114 மாணவர்களும், 2018-19இல் 135 மாணவர்களும், 2019-20இல் நவம்பர் எட்டாம் தேதி வரையில் 158 மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இந்தாண்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையில் 41 விழுக்காடும், நிதி மற்றும் ஆலோசனைத்துறையில் 25 விழுக்காடும், பொது மக்கள் அதிகம் விரும்பும் பொருட்கள் விற்பனைத் துறையில் 4 விழுக்காடும், தொழில்நுட்பத் துறையில் 21 விழுக்காடும், இதரத் துறைகளில் 9 விழுக்காடு என வேலைவாய்ப்புகளும் உள்ளன.
இதையும் படிங்க: மின்விசிறியில் தூக்குப்போடுவதை தடுக்க ஸ்பிரிங் பொருத்தம்!