சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் அருகே இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று சென்றுவிட்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்த பைபர் படகு ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதைக் கண்டு, ரோந்துப் பணியிலிருந்த மெரினா மீட்புக் குழுவினர் உடனடியாக, அந்தப் படகுக்கு அடியில் சிக்கியிருந்த மீனவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், இரண்டு மீனவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. படகையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து விசாரணை நடத்தியதில், திருவல்லிக்கேணி மாட்டான் குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், மகேந்திரன், மதன், முருகன், ஜெயசீலன் ஆகிய ஐந்து மீனவர்கள் என்பதும் மோட்டார் பழுது ஏற்பட்டதால் படகு கவிழ்ந்ததும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறை மத்திய மண்டல அலுவலர் சரவணன் தலைமையிலான 6 பேர் கொண்ட மீட்பு குழுவினரை தீயணைப்பு துறை இயக்குநர் பாராட்டி 10ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கி பாராட்டினார்.
இதையும் படிங்க: காரங்காடு சூழலியல் சுற்றுலாவில் படகு சவாரிக்கு அனுமதி!