ETV Bharat / state

காவல்துறைக்கு முழு சுதந்திரம்- சேகர் பாபு! - North Indians return to our homeland

“தமிழ்நாடு காவல்துறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டுவருகிறது, காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது” என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Sekhar Babu
Sekhar Babu
author img

By

Published : Apr 21, 2022, 8:10 AM IST

சென்னை : சென்னை காவல்துறையின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், ஆதரவற்ற நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து மனநிலை பாதிக்கபட்ட நிலையில் தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் மீட்கப்பட்ட 62 பெண்கள் உள்பட 176 வட மாநிலத்தவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி "கருணை பயணம்" என்ற தலைப்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்துகொண்டு மீட்கப்பட்ட ஆதரவற்றோருக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவற்றவர்களாக, மனநலம் குன்றிய நிலையில் மீட்கப்பட்ட 176 வட மாநிலத்தவர்களும் ராஜஸ்தான், பிகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்று இரவு 10 மணி ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Rescue 176 North Indians return to our homeland journey begins in chennai
காவல்துறைக்கு முழு சுதந்திரம்- சேகர் பாபு!

நிவாரண உதவிகள்: முதற்கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்படும் இவர்கள் அனைவரும் அங்கிருந்து அவரவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொண்டு நிறுவனங்கள் பங்கீடுடன் 6 லட்சம் ரூபாய் செலவில், சென்னை காவல்துறையின் காக்கும் கரங்கள் ஒருங்கிணைந்து ஆதரவற்றோருக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “ஆதரவற்றவர்களுக்கான மேற்கொள்ளும் பணிகள் வெறும் பேயருக்காக இல்லாமல், அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் அனைவரும் பாராட்டக்கூடிய செயலாக இருக்க வேண்டும்" என்றார்.

கருணை பயணம் விழாவில் சேகர் பாபு

சொந்த ஊருக்கு திரும்பிய 176 பேர்: அவர்களுக்கு தேவையான உதவிகள், மருத்துவ கட்டமைப்புகள் என அனைத்தையும் சீரான முறையில் செய்து தர வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், ஏப்.20ஆம் தேதி புதன்கிழமை 176 நபர்கள் ரயில்கள் மூலம் அவர்களை சொந்த ஊருக்கு செல்வதாக தெரிவித்தார்.

அடுத்தபடியாக இங்கிருந்து வட மாநிலங்களுக்குச் சென்று அங்கிருக்கும் தமிழர்களை மீட்கும் பணிகளையும் தன்னார்வலர்களுடன் இணைந்து தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
காவல்துறைக்கு முழு சுதந்திரம்: நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழ்நாடு காவல் துறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வருவதாகவும், முழு அளவு சுதந்திரத்தோடு குற்றப் பின்னணியை கவனித்து, முழு பொறுப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதுவரை குற்றங்களுக்கு எதிராகவும், கலவரங்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்த காவல்துறை, இன்று மனிதாபிமானத்துடன் தங்கள் கரங்களால் அரவணைத்தும் உள்ளது என்பது இன்றைய நிகழ்ச்சியின் வரலாறு எனப் புகழாரம் சூட்டினார்.

மீண்டும் உயிர்த்தெழுந்தனர்: இன்றைய தினம் அனுப்பி வைக்க கூடிய இவர்கள் யார் எவர் எனத் தெரியாது, தொப்புள்கொடி உறவு கூட கிடையாது, கூடிய விரைவில் அவரவர் ஊர்களுக்கு சென்று அவரவர் குடும்பங்களுடன் ஒன்று சேர்ந்து மேலும் குணமடைவார்கள் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இதற்கு முன்பு காணாமல் போனவர்களின் உறவினர்கள், இவர்கள் மறைந்து விட்டார்கள் என நினைத்து ஈம சடங்கு கூட செய்திருக்க கூடும். ஆனால் இவர்களை திரும்ப உயிர்த்தெழுப்பி மீட்டு சேர்க்கும் பணியை செய்த பெருமைக்குரிய தமிழ்நாடு காவல்துறைக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க : மருதமலை முருகன் கோயிலுக்கு லிப்ட் வசதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.