சென்னை: 11,12ஆம் வகுப்பு முதல், ஆராய்ச்சிப் படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்கான NTS எனப்படும் தேசிய திறனாய்வு போட்டித் தேர்வு வரும் 27ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வு 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு 12,000 ரூபாய் உதவித் தொகையும், அதன்பிறகு பட்டப் படிப்பு, முதல் , ஆராய்ச்சி படிப்பு வரை உதவித்தொகையினை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்த கல்வி உதவித் தொகைக்கான முதல்கட்ட தேர்வு வரும் 27-ஆம் தேதி தமிழ்நாட்டில் வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நடைபெறுகின்றன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர் .
பள்ளி மாணவர்கள் அதிகளவில் பங்கேற்கும் தேர்வு என்பதால், கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
27ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை ஒரு தேர்வும், 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை ஒரு தேர்வும் நடைபெற இருக்கிறது. தலா 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்வு சரியான விடைகளை தேர்ந்தெடுத்து எழுதும் வகையில் நடத்தப்படுகிறது .
ஒரு வகுப்பறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். எனினும் தேர்வு மையத்தில் அதிகமான மாணவர்கள் கூடுவார்கள் என்பதால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வு ஒத்திவைப்பு!