ETV Bharat / state

தனியார் மருத்துவக்கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க கோரிக்கை - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: தனியார் மருத்துவக்கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க கோரிக்கை

author img

By

Published : Nov 12, 2020, 3:04 PM IST

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்ததாவது,

"இந்தியா விடுதலை அடைந்து 73 ஆண்டுகள் ஆன பிறகும் கூட மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பான குழப்பங்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசு மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வருகிறது. மாநில மக்களின் மருத்துவத் தேவைகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. இதில் உச்ச நீதிமன்றத்திற்கும் பங்குள்ளது.

மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 14 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைத்துள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்களும், 1,922 முதுநிலை மருத்துவ இடங்களும், 369 உயர் சிறப்பு மருத்துவ இடங்களும் உள்ளன. தமிழ்நாடு அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் தான், இந்த மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, மருத்துவ இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

அதிகமான மருத்துவ இடங்கள் இருந்த போதிலும், அவற்றை முழுமையாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெற முடியவில்லை. வேறு மாநிலத்தவர் அதிக இடங்களை அபகரித்துக் கொள்ளும் நிலை உள்ளது. அதற்கு அகில இந்தியத் தொகுப்பு முறை காரணமாக உள்ளது. இளநிலை மருத்துவ இடங்களில் 15 விழுக்காட்டையும், முதுநிலை மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டையும் அகில இந்திய தொகுப்பிற்கு நாம் அளித்து வருகிறோம். அகில இந்திய தொகுப்பில் தமிழ்நாடு மாணவர்கள் நாம் வழங்கும் அளவிற்கு இடங்களைப் பெறுவதில்லை.

தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து 100 விழுக்காடு உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்குமான கலந்தாய்வை அரசே நடத்தி வந்தது. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் மட்டும் தான் சேர்ந்து படிக்க முடியும். வேறு மாநிலத்தவர்கள் சேரமுடியாது. உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு, அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் படித்து முடித்த பின் பணிமூப்பு அடையும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை நோயாளிகள், உயர் சிறப்பு மருத்துவர்களின் சேவையை இலவசமாக பெற முடிந்தது.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு திணித்தது. அது மட்டுமன்றி உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடத்தும் உரிமையும், மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமையும் மத்திய அரசு பறித்துக் கொண்டு விட்டது.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு நீட்டிலிருந்து விலக்கு பெற மசோதாவை கூட சட்டப்பேரவையில் அரசு தாக்கல் செய்யவில்லை. அதுமட்டுமன்றி உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீடும், உச்ச நீதிமன்றத்தால் ரத்தானது.

அரசு மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம். இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய இந்திய மருத்துவக் கழகத்திற்கு உரிமை இல்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை அரசியல் சட்ட அமர்வு வழங்கியது.

அதன் அடிப்படையில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கிட தமிழ்நாடு அரசும், கேரள அரசும் முயல்கின்றன. இதற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளை உறுதியுடன் எதிர் கொள்ள வேண்டும். மாநில உரிமையை நிலை நாட்ட வேண்டும். ஆகஸ்ட் மாதமே உச்ச நீதிமன்ற உத்தரவு வந்தும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு கால தாமதமாக நவம்பர் 7ஆம் தேதி ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதற்கான சட்ட ஆலோசனைப் பெற்று தகுந்த சட்டத்தையும் இயற்ற வேண்டும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்ற அடிப்படையில் INI CET நுழைவுத் தேர்வு AIMS, JIPMER, PGI CHANDHIGAR போன்ற மத்திய அரசு நிறுவனங்களுக்கு நவம்பர் முதல் தனியாக நடத்தப்பட உள்ளன. நீட்டிலிருந்து மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் மீண்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனங்களுக்கு மட்டும் நீட்டிலிருந்து மீண்டும் விலக்கு அளிக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு விலக்களிக்க மறுப்பது, மாநில உரிமைகளை அப்பட்டமாக பறிக்கும் செயலாகும்.

நீட்டிலிருந்து விலக்கு பெற விரும்பும் மாநிலங்களுக்கு, அத்தேர்விலிருந்து விலக்கு அளிக்க தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை, தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். இப்பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வை காண தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக எடுத்திட வேண்டும்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், தனியார் மருத்துவக் கல்லூரிகளைவிட அதிகமாக உள்ளது. இக்கல்லூரிகளில் பயிலும் மாணர்வர்களும், அவர்களது பெற்றோர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளான இவற்றில் சேர ஏழை எளிய மாணவர்கள் தயங்குகின்றனர். இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தையே இக்கல்லூரிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய பல் மருத்துவக் கல்லூரி தொடங்க கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.