ETV Bharat / state

மே நான்காம் தேதி தனியார் பள்ளி அலுவலகம் செயல்பட கோரிக்கை - Permission to operate Chennai private school

சென்னை: மே மாதமும் ஊரடங்கு தொடரும் நிலை ஏற்பட்டால் மே நான்காம் தேதி பொதுத்தேர்வு ஏற்பாடுகளை செய்ய ஓரிரு தனியார் பள்ளி அலுவலர்களை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் பள்ளி அலுவலகம் செயல்பட கோரிக்கை
தனியார் பள்ளி அலுவலகம் செயல்பட கோரிக்கை
author img

By

Published : Apr 17, 2020, 7:04 PM IST

கரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் பல நாள்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆகையால் மே மாதம் நான்காம் தேதி முதல் தனியார் பள்ளி அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், "தமிழ்நாட்டில் சுமார் 20 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. கரோனா வைரஸ் ஆட்கொல்லி நோய் உலக மக்களை மரணக்குழியில் தள்ளி வருகிறது. கரோனாவை தடுக்க வேண்டி அரசின் முயற்சிகளுக்கு தனியார் பள்ளிகள் முழு ஆதரவு அளித்து வருகின்றன.

மே மாதமும் ஊரடங்கு தொடரும் நிலை ஏற்பட்டால் பொதுத்தேர்வு வர உள்ள நிலையில்மே மாதம் நான்காம் தேதி தனியார் பள்ளிகளை திறந்து வைத்து அலுவலக பணிகளை மட்டும் ஓரிருவர் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்" என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: கரோனா நாள்களில் இப்படியும் கொடுமையா? - பள்ளிக்கல்வித்துறைக்கு சு.வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.